தரம் 01 இற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

Report Print Theesan in கல்வி

2018ஆம் கல்வியாண்டின் தரம் ஒன்றிற்கான மாணவர்களை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வு வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.

கல்லூரியின் முதல்வர் தா.அமிர்தலிங்கத்தின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுவருகின்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகர கோட்ட கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், சர்வமதத் தலைவர்கள், கல்லூரியின் பிரதி அதிபர், ஆரம்பபிரிவு அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, 2018 ஆம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை முன் வாயிலில் தரம் 2இல் கல்வி கற்கும் மாணவர்கள் தரம் 1இல்கற்பதற்காக பாடசாலைக்கு வருகை தந்த புதிய மாணவர்களை வரவேற்றுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்