கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்!

Report Print Nivetha in கல்வி
49Shares
49Shares
ibctamil.com

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகளுக்கு அமைய 2018 ஆம் ஆண்டு தரம் 6இற்கு சேர்த்து கொள்வதற்குரிய மீள் கோரிக்கைக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தினை www.moe.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, கல்வி பணிப்பாளர், கல்வி நடவடிக்கைகளுக்கான பிரிவு, கல்வி அமைச்சு, இசுறுபாய, பெலவத்தை, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெற்றிருந்தன. இதில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இணையத்தளத்தினை பார்வையிட இங்கே அழுத்தவும்..

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்