ஜனவரி மாதத்தில் வழங்கப்படவுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகள்

Report Print Gokulan Gokulan in கல்வி

வடக்கு மாகாண அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்படாதிருந்த சம்பள நிலுவைகள் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நீண்டகாலம் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படாதிருந்த பெருந்தொகை சம்பள நிலுவைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ஓய்வுபெற்ற அதிபர்கள், ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவைகள் வழங்கப்பட்டன.

போதிய நிதியில்லாததால் கடமையில் உள்ளவர்களுக்கு ஜனவரி மாதம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதன்படி, ஜனவரி மாதம் அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களுக்குமான சம்பள நிலுவைகள் வழங்குவதற்கான நிதி தற்போது கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது.

இதற்காகப் பாடுபட்ட அனைவருக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்