கணித பாட பரீட்சையில் மாணவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: கல்வி அமைச்சரின் பதில்?

Report Print Shalini in கல்வி

2017ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதபாட வினாத்தாள் தொடர்பில் பல தரப்பிலிருந்தும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

பரீட்சை எழுதிய மாணவர்களும், படிப்பித்த ஆசிரியர்களும் இது எமது பாட அலகுகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்ததாக விசனம் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன் தமக்கு போதியளவு நேரம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கணிதபாட வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை வினாத்தாள் என்பது இலகுவானதாக அமையாது. எனினும், பரீட்சை வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது, போதியளவு நேரம் ஒதுக்கப்படவில்லை என மாணவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கல்வி அமைச்சர் மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்