மட்டக்களப்பில் மாணவர்களின் இடைவிலகல் பாரிய பிரச்சினை: அகிலா கனகசூரியம்

Report Print V.T.Sahadevarajah in கல்வி

அதிகமாக ஆண் மாணவர்களே வரவு குறைவானவர்களாவும், எழுத,வாசிக்க முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இது எதிர்கால சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள், பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலான ஒன்றுகூடல் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில், நேற்று செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மாணவர்களின் இடைவிலகல், பாடசாலைக்கு ஒழுங்கான வரவின்மை போன்றன பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

அத்துடன், தரம் 9, 10 ஆகிய வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களே அதிகம் பாடசாலையினை விட்டு இடைவிலகுகின்றவர்களாக, வரவுக்குறைவானவர்களாக இருக்கின்றனர்.

இதேவேளை, பெண் மாணவர்களை விட இரண்டு மடங்கான ஆண் மாணவர்கள் வரவு குறைவானவர்களாகவும், எழுத,வாசிக்க முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.

குறித்த செயற்பாடானது எதிர்கால சமூகத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும். இவற்றினை தீர்ப்பதற்கு சமூகத்தோடு நெருங்கி வேலை செய்ய வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்