மாணவர்களுக்கு சாதாரண தரப் பரீட்சைக்கான வாய்ப்பை வழங்காத அதிபர்

Report Print Mubarak in கல்வி

திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் பதினைந்து மாணவர்களுக்கு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை எழுதுவதற்கான அனுமதி அட்டை கிடைக்கப் பெறவில்லை என 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது

அப் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தாயே இவ்வாறு இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

இம்முறை தனது மகள் சாதாரண தரப் பரீட்சை எழுதவிருந்த நிலையில் அவருக்கு அனுமதி அட்டை வழங்கப்படவில்லை எனவும் இது போன்று பதினைந்து மாணவர்கள் உள்ளதாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரியப்படுத்தியுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் இந்த விடயம் குறித்து பொலிஸார் சம்பந்தப்பட்ட பாடசா​லை அதிபரிடம் வினவியுள்ளனர்.

இந்தநிலையில் அந்த மாணவி ஆறு மாதங்கள் பாடசாலைக்கு சமுகமளித்திருக்கவில்லை எனவும் மேலும் சில மாணவர்கள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றத் தகுதி அற்றவர்கள் எனக் கருதியமையால் அவர்களது விருப்பத்தின் பேரில் பரீட்சைக்கு அனுமதிக்கவில்லை எனவும் குறித்த அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...