வடக்கில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

Report Print Thileepan Thileepan in கல்வி

புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் சேவை முன் பயிற்சி வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா தெற்கு வலயத்தின் ஏற்பாட்டில் புதிதாக நியமனம் பெற்ற வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த 204 பட்டதாரி ஆசிரியர்களுக்காக இப்பயிற்சி வழங்கப்படுகின்றது.

நான்கு வளவாளர்களினால் நடத்தப்படும் இப்பயிற்சி எதிர்வரும் 31.12.2017 வரை தொடர்ச்சியாக 21 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தில் நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது தொழிலுக்கு செல்வதற்கான முன் ஆயத்த பயிற்சியாக இப்பயிற்சி உள்ளதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வவுனியா கல்வியியற் கல்லூரியில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்