வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளி நிலையத்தின் ஒளிவிழா

Report Print Theesan in கல்வி

வவுனியா - வேப்பங்குளம் பாரதி முன்பள்ளி நிலையத்தின் ஒளி விழா நிகழ்வானது பாரதி சனசமூக நிலையத்தின் தலைவர் க.கணேசராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(12) வெளிச்சம் அறக்கட்டளையின் அனுசரணையுடன் பாரதி முன்பள்ளி நிலையத்தில் நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களினது வரவேற்பு நடனம், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், உள்ளூராட்சி மன்றத்தினால் வாசிப்பு மாதத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் ,வேப்பங்குளம் தேவாலய பங்குத் தந்தை, வவுனியா நகரசபையின் செயலாளர் தயாபரன், சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்