யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு பொதுப்பட்டமளிப்பு விழா

Report Print Sumi in கல்வி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 33ஆவது ஆண்டு பொதுப்பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று ஐந்து பிரதான அமர்வுகளாக நடைபெற்றுள்ளது.

முதலாம் நாள் அமர்வில் உயர் பட்டப் படிப்புகள் பீடம்,முகாமைத்துவ வணிக பீடம்,கலைப்பீடம், சட்டத்துறை, விவசாய பீடம், மருத்துவ பீடத்தின் இணை மருத்துவ அலகு, சித்த மருத்துவத் துறை, வவுனியாவளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடம், வணிக கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 816 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மங்கள வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய கலாச்சார முறைப்படி பட்டதாரிகள் மற்றும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பிரதான மண்டபத்தில் பட்டம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது, பரிந்துரைக்கப்பட்ட சகல பட்டதாரிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் பட்டங்களை வழங்கி வைத்துள்ளதுடன், அவர்களை பட்டதாரிகளாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், 3 பேர் கலாநிதி பட்டத்தையும், சட்டத்துறையைச் சேர்ந்த 63பேர் சட்டமாணி பட்டத்தையும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 53பேர் விவசாய விஞ்ஞான மாணிபட்டத்தையும், வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த 84 பேர் இளமாணி, விஞ்ஞான மாணி பட்டத்தையும், வணிக கற்றல் பீடத்தைச் சேர்ந்த 110 பேர் வியாபார முகாமைத்துவமாணி பட்டத்தையும், மருத்துவ பீடத்தில் 58 பேர் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி, தாதியல் விஞ்ஞானமாணி, மருந்தகவியல் ஆகிய பட்டத்தையும், முகாமைத்துவ வணிக பீடத்தைச் சேர்ந்த 341பேர் வியாபார நிர்வாக மாணி,

வர்த்தகமாணி பட்டங்களையும், சித்தமருத்துவதுறையில் 32பேர் சித்தவைத்திய சத்திரசிகிச்சை மாணிபட்டத்தையும், ஆங்கிலம் கற்பிப்பதற்கான பட்டப்படிப்பின்டிப்ளோமா 5 பேரும், ஆங்கிலம் மற்றும் வியாபார நிர்வாகத்தில் 10பேரும் இவ்வாறு பட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சர்வ மத தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...