வவுனியா - இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழா

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா - இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(07) பாடசாலையின் பிரதி அதிபர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற 08 மாணவர்கள் உட்பட 55 மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ந.சிவசக்தி ஆனந்தன், சி.சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ப.தியாகராஜா ஆகியோர் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்