ஜனாதிபதியின் சுரக்ஸா சிறுவர் காப்புறுதி திட்டம் ஆரம்பம்

Report Print Kumar in கல்வி

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள சுரக்ஸா சிறுவர் காப்புறுதி திட்டத்தினை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் அறிமுகப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் இன்றைய தினம்(07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு, கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் அதிபர் திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

பாடசாலை செல்லும் மாணவர்கள் சுகவீன காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கி சிறந்த கல்வியைப்பெறும் வகையில் இந்த சுரக்ஸா சிறுவர் காப்புறுதி திட்ட 2018 வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers