க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Dias Dias in கல்வி

இம் முறை கா.பொ.த. சாதாரண தரத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள புதிய மற்றும் பழைய பாடங்களுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பாக பரீட்சைத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை புதிய மற்றும் பழைய பாடங்களின் கீழ் 2017 .12.12 முதல் 2017.12.21 வரையில் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சை காலை 8.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. காலை 8.00 மணிக்கு முன்னர் அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்டை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்கவேண்டும்.

இவ்வாறு பரீட்சைக்கு சமுகமளிக்கும் போது பரீட்சை அட்டை அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு அவசியம் கொண்டுவரவேண்டும்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் பரீட்சார்த்தி பரீட்சை அட்டையில் தாம் விண்ணப்பித்துள்ள பாடத்திற்கான மத்திய மற்றும் உறுதிசெய்யப்பட்டமை உள்ளிட்டவை தொடர்பில் சரியாக பரிசோதனை செய்துகொள்ளவேண்டும்.

ஏதேனும் மாற்றங்கள் இருக்குமாயின் உடனடியாக பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கவேண்டும்.

இதேபோன்று பரீட்சையின் போது பரீட்சார்த்திகளினால் ஸ்மாட் கைக்கடிகாரம் , கையடக்கதொலைபேசி , இலத்திரணியல் உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் பரீட்சை மோசடிகள் இடம்பெறுகின்றதா என்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் பரீட்சார்த்திகளுக்கு 5 வருடங்களுக்கு பரீட்சைத்திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளிலும் தோற்றுவது தடைப்படும். அத்துடன் இம்முறை பரீட்சை பெறுபேறுகளும் இரத்து செய்யப்படும்.

பரீட்சை நடைபெறும் சந்தர்ப்பத்தில் வெளித்தரப்பினரால் பரீட்சார்த்திக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தப்படுமாயின் அது தொடர்பில் பரீட்சைத்திணைக்களத்திற்கும், பொலிஸ்திணைக்களத்திற்கும் அறிவிப்பதற்கு அனைத்து ஆலோசனைகளும் பரீட்சை மண்டபத்திற்கு பொறுப்பானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் பரீட்சை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படாத எந்தவொரு நபரும் பிரவேசிக்க கூடாது.

பரீட்சை நிலையமாக உள்ள பாடசாலை வளவுக்குள் நிர்மாணப்பணிகள், வகுப்புக்களை நடத்துதல், விளையாட்டு வைபவம், கூட்டங்களை நடத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இதற்கமைவாக செயற்படுவதற்கு பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை அதிபர்கள் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பரீட்சை மண்டபத்தில் யாரேனும் ஏதேனும் மோசடி அல்லது முறைகேடுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் பரீட்சைத்திணைக்களத்திற்கும் பரீட்சார்த்திகளுக்கும் பெற்றோர்களுக்கும் அறிவிக்க முடியும்.

இந்த பரீட்சை தொடர்பாக முறைப்பாடுகளுக்கு கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். இதற்கான தொலைபேசி இலக்கங்கள் பரீட்சை திணைக்களத்துடன் உடனடியாக தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம் 1911 பரீட்சை ஏற்பாட்டுக்கிளை தொலைபேசி இலக்கம் 0112784208 , 0112784537 , 0113188350 , 0113140314 பொலிஸ் தலைமையகம் 0112421111 , பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்