கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் இணையதளத்தில் வெளியீடு

Report Print Mubarak in கல்வி

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பெயர் விவரங்கள் இன்று வெளியானதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பெறுபேறுகளை கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் www.ep.gov.lk எனும் இணையத்தளத்தில் தற்போது பார்வையிடலாம்.

மேலும், இந்த நியமனங்கள் திருகோணமலை, ஏகம்பரம் மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமையில் நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்