கல்வியமைச்சுக்குள் தமிழ் மொழி அதிகாரிகள்

Report Print Nivetha in கல்வி

கல்வியமைச்சுக்குள் தமிழ் மொழி அதிகாரிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் தமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பல்வேறுபட்ட பிரச்சினைகள் எழுந்ததாகவும் அது தற்போது தீர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் போது அதனை தீர்த்து எதிர்காலம் கருதி செயற்பட வேண்டும். அதனை விடுத்து விவாகரத்துக்கு சென்றால் குடும்பம் சீர்குலைந்து விடும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்