அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபா கொடுத்த தமிழர்!

Report Print Samy in கல்வி

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தன்னுடைய பங்காக, கோலாலம்பூரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் தான்ஶ்ரீ சோமசுந்தரம் ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ஒன்று. இதில், உயர்தனிச் செம்மொழியாக சீனம், தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருதம் மற்றும் பெர்சியம் மொழிகள் உள்ளன.

தமிழ் மொழியைத் தவிர மற்ற மொழிகளுக்கு இருக்கை இருக்கிறது. ஆனால், தமிழ் மொழிக்கு இருக்கை இல்லை.

எனவே, தமிழ் மொழிக்குப் பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற வேண்டும் என்பதற்காக உலகில் பல்வேறு இடங்களில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.

தமிழ் இருக்கைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹானும் 20 லட்சம் வழங்கினார்.

இவர்களைத் தொடர்ந்து பலரும் நன்கொடை அளித்து வரும் வேளையில், கோலாலம்பூரில் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க விஸ்மா துன் சம்பந்தன் மாளிகையில் நேற்றுமுன்தினம் (22.11.2017) நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியா கோலாலம்பூரில் வசிக்கும் தான்ஶ்ரீ சோமசுந்தரம் 1,60.000 டொலர் (இந்திய மதிப்பு ஒரு கோடி) காசோலையை ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை பொறுப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகத்திடம் வழங்கினார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்