மடுவில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Report Print Ashik in கல்வி

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கட்டையடம்பன் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எம். லூர்தாகரன் தலைமையில் மடு பொலிஸாரின் ஏற்பாட்டில் நேற்று பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

வறுமை காரணமாக கல்வி கற்பதில் சிரமத்தை எதிர் கொண்டுள்ள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மடு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான பி.எஸ்.தயானந்த மற்றும் பி.சி.தேவப்பெரும, வெண்ணப்புவ பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான ஆனந்தப் பெரேரா ஆகியோரின் நிதி உதவியின் மூலம் இந்த உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்