58 ஆண்டுகளின் பின் சாதனை: பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி

Report Print Theesan in கல்வி

வவுனியா - காத்தார்சின்னக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 58 ஆண்டுகளுக்கு பின்னர் மாணவியொருவர் கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு நேற்றைய முன்தினம் லண்டனில் இயங்கும் அறக்கட்டளை அமைப்பொன்றின் பிரதிநிதிகளினால் துவிச்சக்கரவண்டி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

சோபனா டட்லி என்ற மாணவியின் இந்த சாதனையால் தமது பாடசாலைக்கு பெருமை கிடைத்துள்ளதாக பாடசாலையின் அதிபரும், ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாடசாலை அதிபர் த.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஷ்னண் கலந்து கொண்டதுடன், மேலும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்