மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஒளி விழா

Report Print Ashik in கல்வி

மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த ஒளி விழா பாடசாலை அதிபர் ஏ.என். யோகராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(20) மதியம் 1.30 மணியளவில் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஒளிவிழா நிகழ்வோடு மன்னார் வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் தமிழ் உதவி கல்வி பணிப்பாளர் பி.பி.எம்.வி.லெம்பேட்டின் பிரியாவிடை நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் யேசுவின் பிறப்பை நினைவு கூறும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, நிகழ்வின் முக்கிய அம்சமாக 34 வருடங்கள் ஆசிரியர் பணி ஆற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள முன்னாள் தோட்டவெளி பாடசாலையின் பொறுப்பாளரும் முன்னாள் தமிழ் உதவி கல்வி பணிப்பாளருமான பி.பி.எம்.வி. லெம்பேட்டின் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வில், தோட்டவெளி பங்குத்தந்தை செபமாலை,ஜோசேவாஸ் நகர் பங்கு தந்தை யூட் குரூஸ்,மடு தியான இல்ல இயக்குனர் அருட்தந்தை இராயப்பு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்