சாதனையாளர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

Report Print Nesan Nesan in கல்வி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, நேற்றைய முன்தினம்(18) கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு தலைமையில் சிசிலியா மேரி அரங்கில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

2016ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரீசில் பரீட்சையில் 68 மாணவர்களும், 2017 ஆம் ஆண்டு 76 மாணவர்களும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளார்கள்.

பாடசாலைகளை பொறுத்தவரையில் ,கிராமப்புற பாடசாலைகளை விட நகர்ப்புற பாடசாலைகளுக்கு அதிகளவு வளங்கள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால், இனிவரும் காலங்களில் அனைத்து பாடசாலைகளுக்கும் சமமான வளப்பங்கீடு நடைபெறும் வகையில் கல்வி அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதற்கு அமைவாகத்தான் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் கருப்பொருளில் பல வேலைத்திட்டங்களை கல்வி அமைச்சு செய்து வருகின்றது.

அத்தோடு சகல பாடசாலைகளுக்கும் இனிவரும் ஆண்டில் மலசலகூட பிரச்சினை, மின்சாரப்பிரச்சினை என்பன இருக்காது.

அதற்கான சகல வேலைப்பாடுகளையும் தற்பேதிருந்தே செய்து வருகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில், கல்வியமைச்சின் திட்டப்பணிப்பாளர் கந்தையா பத்மநந்தன், கல்முனை வலயத்தின் வலயக்கல்வி பணிப்பாளர் அப்துல் ஜலீல், தமிழ் பிரிவிற்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரி திரவியராஜா, ஆரம்ப்பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர் சாந்தகுமார் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்