கந்தளாயில் தேசிய மீலாத் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Report Print Mubarak in கல்வி

கந்தளாய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட தி/ஆயீஷா மகளீர் மகா வித்தியாலயத்தில் தேசிய மீலாத் விழா ஆரம்ப பிரிவு ஹஸிதா போட்டி நிகழ்சியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினை பாடசாலையின் அபிவிருத்தி குழு மற்றும் கந்தளாய் பேராறு பேராத்துவெளி ஜனாஸா நலன்புரி சங்கம் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

பாடசாலையின் முதல்வர் நசூர்தீன் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும், கேடயமும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கந்தளாய் வலயக்கல்விப் பணிப்பாளர், வலயக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள், பெற்றோர்கள், விளையாட்டு கழக தலைவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்