கிண்ணியா வலயக் கல்வி பாடசாலைகளில் கைவிரல் அடையாள பதிவு இயந்திரம்

Report Print Mubarak in கல்வி

திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுகளில் உள்ள சகல பாடசாலைகளிலும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பொருத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் இஸட்.எம்.எம்.நளீம் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும்,

உட்செல்லல், வெளிச்செல்லல் உட்பட வருகையை உறுதிப்படுத்துவதற்காகவே கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பொருத்துமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், கடிதத்தில் குறிப்பிடப்பட்டவாறு குறித்த திகதிக்குள் இயந்திரத்தை பொருத்துமாறும், இயந்திர கொள்வனவுக்காக கிண்ணிய வலயக் கல்வி அலுவலக கணக்காளரை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இயந்திரத்தினை பொருத்தாத பாடசாலை அதிபர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்