வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

Report Print Kumar in கல்வி

மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றதுடன், இதன்போது பாடசாலைக்கான உபகரணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கல்வி, விளையாட்டு மற்றும் இதர செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட அதிபர் காரியாலய தளபாடங்கள் பாடசாலை அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் பொன்.ரவி, ஏறாவூர்ப்பற்று 2 கோட்டக்கல்விப் பணிப்பாளர் சிவகுரு உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்