பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள்

Report Print Yathu in கல்வி

கிளிநொச்சி - உருத்திரபுரம், சாந்தபுரம் ஆகிய பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பும், சட்டமும் என்ற தொனிப்பொருளிலிலும், இளவயதுத் திருமணங்கள் தொடர்பிலும் விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த விழிப்புணர்வு செயற்பாடு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தினால் நேற்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவர் பாதுகாப்பும், சிறுவர் சட்டங்களும் எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று உருத்திரபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், இளவயதுத்திருமணங்கள், இளவயது கருத்தரிப்புக்கள் போன்றவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பிலான செயலமர்வு சாந்தபுரம் பாடசாலையில் நடைபெற்றுள்ளது.

இதில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையினுடைய வைத்தியர் மைதிலி, மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்