கல்வி அமைச்சருக்காக காத்திருந்த பாடசாலை மாணவர்கள்

Report Print Theesan in கல்வி

வவுனியா - பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் வருகையை எதிர்பார்த்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், 'விபுலம்' சஞ்சிகை வெளியீடும் இடம்பெறவிருந்தது .

குறித்த நிகழ்வு இன்று காலை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெறவிருந்தது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், அவரின் வருகைக்காக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரும் சுமார் 1மணிநேரமாக காத்திருந்த நிலையில் வடமாகாண கல்வி அமைச்சர் 9.30 மணியளவில் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்