மட்டக்களப்பு விமான நிலையத்தில் புதிய பயிற்சி பாடசாலை

Report Print Shalini in கல்வி

மட்டக்களப்பு விமான நிலையத்தில் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள தரப்பினரிடத்தில் இருந்து யோசனைகள் கோரப்பட்டு இருந்தன.

அதனடிப்படையில், மட்டக்களப்பு விமான நிலையத்தில் தேசிய விமான சேவைகள் கட்டுப்பாட்டு மற்றும் விமானம் செலுத்துவது தொடர்பான பயிற்சி பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் M/s Skurai Aviation நிறுவனத்தினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனையை செயற்படுத்துவது தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்