பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இடமாற்றம்

Report Print Kamel Kamel in கல்வி

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.என்.ஜே. புஸ்பகுமார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சிற்கு, புஸ்பகுமார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக பரீட்சைத் திணைக்களத்தில் பல்வேறு மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து பரீட்சை திணைக்களத்தின் இரகசிய பிரிவிற்கு பொறுப்பான பிரதி ஆணையாளர் நாயகம் பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்த முறைகேடுகளுடன் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புஸ்பகுமாரவும் உடனடியாக அமுலக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்