10 வயது சிறுவர்களுக்கு இருக்கும் அறிவு கூட ஆசிரியர்களுக்கு இல்லையா?

Report Print Santhan in கல்வி

நைஜீரியாவில் ஆசிரியர்களுக்கு வைக்கப்பட்ட தேர்வில் 20,000 ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளதால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்

நைஜீரியாவின் Kaduna மாநிலத்தில் சமீபத்தில் ஆசிரியர்களின் தகுதியை அறிந்து கொள்வதற்காக தேர்வு வைக்கப்பட்டது.

இந்த தேர்வில் இருந்த கேள்விகள் பத்து வயது சிறுவர்களுக்கு கேட்கப்படும் கேள்விகள் போன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 20,000 பேர் சரியாக பதில் அளிக்கவில்லை எனவும், அவர்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து Kaduna மாநிலத்தின் கவர்னர், தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படி இருக்கும் ஆசிரியர்களை நீங்கள் அனுமதிக்கிறீர்களா என்று கேட்டுள்ளார்.

மேலும் அவர், இந்த தேர்வில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதற்கும் குறைவாக எடுத்தவர்கள் மீண்டும் தேர்வு எழுதி தங்கள் திறமையை நிரூபித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

பணிநீக்கத்திற்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு தரமில்லாத மருத்துவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க முடியுமா? அப்படி அவர் அனுமதிக்கப்பட்டால், பொதுமக்களின் உயிர் தான் போகும், அது போன்று தான் கல்வியும், தரமில்லாத ஆசிரியர்களை பள்ளியில் நியமித்தால், பள்ளி மாணவர்களின் மூளையும் இறந்துவிடும் என்பதாலே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் 10 மில்லியன் குழந்தைகள் அடிப்படைக் கல்வியே இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும், இதற்கு தரமற்ற ஆசிரியர்கள் தான் முக்கிய காரணம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்