களைகட்டிய கோண்டாவில் ஞானவீர முன்பள்ளியின் வருடாந்தக் கலைவிழா

Report Print Thamilin Tholan in கல்வி

யாழ். கோண்டாவில் ஞானவீர முன்பள்ளியின் வருடாந்தக் கலைவிழா நிலையத்தின் செயலாளர் செ.தனுஷன் தலைமையில் கோண்டாவில் சி.சி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு, நேற்றைய தினம்(13) பிற்பகல் 03 மணி முதல் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வடமாகாணக் கல்வியமைச்சின் ஆரம்பப் பிள்ளைப் பருவப் பணிப்பாளர் ஜெயா தம்பையா ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த விழாவில் முன்பள்ளிச் சிறார்களின் கண்ண நடனம், குழுநடனம், வில்லிசை போன்ற பல்வேறு கண்கவர் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், முன்பள்ளிச் சிறார்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய சிறார்களுக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, மேற்படி விழாவில் விருந்தினர்களுடன் முன்பள்ளிச்சிறார்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்