அனைத்துலக “பேசு தமிழா பேசு”: இலங்கை மாணவன் முதல் இடம்

Report Print Thiru in கல்வி

மலேசியாவின் பிரபல ஊடகங்கள் இணைந்து இலங்கையில் நடத்திய பேசு தமிழா பேசு அனைத்துலக பேச்சுப் போட்டியில் இலங்கை கொழும்பு பல்கலைக்கழக மாணவன் சாருஜன் மெய்யழகன் முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனைத்துலக இரண்டாவது, பேசு தமிழா பேசு பேச்சுப் போட்டி கொழும்பு கொழும்பு 07 நடா மண்டபம் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இளைஞர்களிடையே பேச்சாற்றலையும் தலைமைத்துவத் திறனையும் வளர்க்கும் உயரிய நோக்கில் உருவான 'பேசு தமிழா பேசு' போட்டி பின்னர் அனைத்துலக ரீதியில் புதிய பரிணாமத்தைப் பெற்றது.

இதன் முதலாவது பேச்சுப் போட்டி கடந்த வருடம் தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிலையில், கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது பேசு தமிழா பேசு போட்டியில் இலங்கையை பிரதிநித்துவப்படுத்தி சாருஜன் மெய்யழகன், மலேசியாவைச் சேர்ந்த உமாபரன் மணிவேல் , நித்யா சைகன் ஆகியோரும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ்பரதன் தழிழ்காவலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவற்றுள் இலங்கையைச் சேர்ந்த மாணவன் சாருஜன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொள்ள ஏனைய மூவரும் முறையே அடுத்த அடுத்த இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது வெற்றிப்பெற்றவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை மாணவர் எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக தமிழர் மாநாட்டிலும் கௌரவிக்கப்படவுள்ளார்.

மேலும் குறித்த நிகழ்வின்போது, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், அமைச்சர் மனோ கணேசன், உலக புகழ் பெற்ற அறிவிப்பாளர் அப்துல் ஹமீத், உலக தமிழ் வம்சாவளி அமைப்பு தலைமை ஒருங்கினைப்பாளர் ஜெயா செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்