அறிவோம் ஆங்கிலம்: Cereal மற்றும் Serial வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்

Report Print Raju Raju in கல்வி

Cereal மற்றும் Serial வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும்

Cereal

இது பார்லி (Barley), கம்பு (Bajra), குதிரைவாலி (Barnyard Millet), பாசுமதி அரிசி (Basmati Rice) போன்ற தானிய உணவு வகைகளை குறிக்கும்.

cereal என்ற வார்த்தையை உணவு வகைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

Tom is eating cereal.

I'll have some cereal and orange juice.

Foods rich in vitamin E include dark-green, leafy vegetables, beans, nuts and whole-grain cereals.

Serial

இடைவெளி இல்லாமல் பல பகுதிகளாக தொடர்ச்சியாக நடக்கும் விடயங்கள் அல்லது கதைகள் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

இதை தமிழில் தொடர், வரிசைத்தொடர், சரம் என குறிப்பிடலாம்.

தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் ஒளிபரப்பாகும் நாடகம், கதை தொடர் போன்றவைகளில் Serial என்ற வார்த்தை அதிகம் பயன்படுகிறது.

Betty is a serial killer.

A new serial will begin in next month's issue.

Also, two relations need not be serial in order to be ordinally similar; but if one is serial, so is the other.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்