யாழ்.வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய பரிசளிப்பு விழா

Report Print Thamilin Tholan in கல்வி

யாழ்.வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் செல்வி.வாசுகி செல்வரட்ணம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, நேற்று சனிக்கிழமை(11) காலை 09 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

விழாவில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஞானசோதியன் தம்பதியினர், பாடசாலையின் பழைய மாணவிகளான ம.ரோகினி, தி.ஜெயந்தி ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இதன் போது மாணவர்களுக்கான பரிசில்கள் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை, விழாவில் வடமாகாணசபை உறுப்பினருடன், விருந்தினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்