பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய பீட கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in கல்வி

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் சகல கற்றல் நடவடிக்கைகளும் நவம்பர் மாதம் 13ம் திகதி ஆரம்பமாவதாக வைத்திய பீடாதிபதி அறிவித்துள்ளார்.

மாலபே 'சைட்டம்' தனியார் வைத்திய கல்லூரி பிரச்சினைக்கு அரசு முறையான தீர்வொன்றை தற்போது வழங்கியுள்ளது.

இந்த நிலையில் சகல வைத்திய பீட மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி கல்வி, வைத்தியப் பயிற்சி (கிளினிக்) மற்றும் பரீட்சை நடவடிக்கைகள் ஆரம்பமாவதாகவும் வைத்தியபீடம் தெரிவித்துள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்