சாதனை படைத்த தமிழ் மாணவிக்கு கிடைத்த வாய்ப்பு

Report Print Sujitha Sri in கல்வி

அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு, பாண்டியன் குளம் மகா வித்தியாலய தமிழ் மாணவிக்கு மலேசியா செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாணவியான தர்சிகா அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் 44 கிலோகிராம் பிரிவில் 78 கிலோகிராம் பளு தூக்கி தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் மலேசியாவில் நடைபெறும் பளு தூக்கும் போட்டியில் பங்குபெற தெரிவான நிலையில் போட்டிக்கு செல்வதற்கான வறுமை நிலையில் இருந்தமையால் உதவி கோரியிருந்தார்.

இதனைத் தொடரிந்து, அவருக்கு பல்வேறு தரப்பினராலும் 20,000 ரூபா வரையிலான நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்