அரசு பள்ளி மாணவர்களின் ஆர்கானிக் பேனா

Report Print Fathima Fathima in கல்வி

தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் ஆர்கானிக் பேனாவை தயாரித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் நடுத்தர பள்ளி மாணவர்களே இச்சாதனையை புரிந்துள்ளனர்.

தன்ராஜ், தனுஷ், மனோஜ்குமார், ஜோதிப்பிரியா, சங்கர் மற்றும் தமிழ்ச்செல்வன் இணைந்து வாழை இலை, வாழைத்தண்டு, தென்னை இலை, ஆமணக்கு தண்டு ஆகியவற்றைக் கொண்டு பேனாவை உருவாக்கியுள்ளனர்.

இந்த ட்யூப்பின் ஒருமுனையில் மைதா பசை கொண்டு மூடப்பட்டு இன்க் நிரப்பப்படுகிறது, இதில் மக்காத ஒரு முனை ஒன்றால் Nib மட்டும் தான்.

சிலமாதங்கள் வரையில் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2017 தேசிய அறிவியல் மாநாட்டிற்காக புதிய பேனா வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்