2017ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்த காலக்கட்டத்தில் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகுவதை நாம் அவதானித்தோம்.
அந்த வகையில் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் லங்காசிறி ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
இதற்காக ஆசிரியர் கலாநிதி சர்மா அவர்கள் உங்களுக்கு வரலாறு பாடத்தின் ஒவ்வொரு அலகுகளையும் இலகுவான முறையில் தொடர்ச்சியாக கற்பித்து வருகின்றார்.
அந்த வகையில் இன்று உங்களுக்கு வரலாற்றுப்பாடத்தில் கைத்தொழில் புரட்சியின் நான்காம் பாகம் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்து வரும் தினங்களில் கணிதம், தமிழ், வரலாறு, விஞ்ஞானம், சமயம் போன்ற பாடங்களையும் சிரேஸ்ட ஆசிரியர்கள் எம்முடன் இணைந்து உங்களுக்காக கற்றுத்தரவுள்ளனர்.
இதேவேளை, ஒவ்வொரு பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு தொடர்ந்தும் எமது செய்தி சேவையுடன் இணைந்திருங்கள்.