உயர்தரப்பரீட்சைக்கான ஒப்படைகளை இரத்துச் செய்ய ஆலோசனை

Report Print Aasim in கல்வி

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பதாரிகள் அந்ததந்தப் பாடங்களுக்கான ஒப்படைகளை கையளிக்கும் முறையை இரத்துச் செய்ய கல்வி அமைச்சு ஆலோசித்து வருகின்றது.

புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்துப் பரீட்சார்த்திகளும் தாங்கள் தோற்றவுள்ள பாடங்களுக்கான ஒப்படையொன்றை கையளித்த பின்னரே பரீட்சைக்கான அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் ஏதேனும் ஒரு பாடசாலையின் அதிபரிடம் குறித்த ஒப்படைகளை கையளித்துள்ளதாக சான்று பெற்றால் மாத்திரமே உயர்தரப்பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

இந்த நிலையை மாற்றி பரீட்சார்த்திகள் ஒப்படைகள் இன்றியே பரீட்சைக்குத் தோற்றும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசித்து வருகின்றது.

இந்த நடைமுறை பெரும்பாலும் எதிர்வரும் ஆண்டு தொடக்கம் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers