கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

Report Print Kaviyan in கல்வி

கிளிநொச்சி,கோணாவில் மகாவித்தியாலய மாணவர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வித்தியாலய அதிபர் க.இதயசிவதாஸ் தலைமையில் நேற்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, கலை கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், போக்குவரத்துக்கான வீதி வசதிகள் உட்பட வசதிவாய்ப்புக்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கோணாவில் கிராமத்தில் காணப்படும் இந்த வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவிற்கு எஸ்.ஜே.சி-87 நிறுவனம், லங்காசிறி நிறுவனம் ஆகியவை மாணவர்களது கல்வி மேம்பாடு கருதி குறிப்பிட்டளவு நிதியுதவி வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும், இலங்கை மின்சார சபையின் மின் அத்தியட்சகருமான இ.ரகுலேந்திரா, கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் சி.தங்கேஸ்வரி உட்படப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்