மட்டக்களப்பு கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலய சாதனையாளர் கௌரவிப்பு

Report Print Navoj in கல்வி

மட்டக்களப்பு - கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று வித்தியாலய அதிபர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், பாடசாலைக் கல்வி கற்பித்தலில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஓய்வு பெற்ற மட்டக்களப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன், பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் 15 வருடத்தின் பின் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் மூன்று மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாம், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.அருட்பிரகாசம், ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன், கொக்குவில் சக்தி அறநெறிப் பாடசாலை அதிபர் க.ரகுநாதன் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers