சிறப்பாக இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

Report Print Viyu in கல்வி

வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட விநாயகபுர பொது நூலகத்தில் கலைநிகழ்வுகளும், பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றைய தினம்(2) விநாயகபுர சனசமூக கட்டடத்தில் நூலக அலுவலர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம் சிஹாப்தின், வாழைச்சேனை பொது நூலக நூலகர் கே.ருத்ரன், கோறளைப்பற்று பிரதேச சபை சனசமூக உத்தியோகத்தர் எஸ். குகநேசன், கிராம சேவகர்கள் வரதராஜன், கிரிஷாந்த், நூலக அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...