அகில இலங்கை ரீதியில் தெரிவாகியுள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலையின் மாணவர்கள்

Report Print Sinan in கல்வி

மத்திய மாகாணத்தின் இவ்வருடத்திற்கான செயல்பட்டு மகிழ்வோம் போட்டியில், நுவரெலியா கல்வி வலயம் கோட்டம் 3 இற்குட்பட்ட அப்பர் கிரென்லி தமிழ் வித்தியாலய மாணவர்கள் வெற்றி பெற்று அகில இலங்கை போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

“செயல்பட்டு மகிழ்வோம் 2017” இற்கான போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது மிகவும் பின்தங்கிய பாடசாலையான அப்பர் கிரென்லி தமிழ் வித்தியாலயத்தின் தரம் 3 மற்றும் தரம் 5 மாணவர்கள் சிறப்பாக பங்குபற்றி வெற்றி பெற்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளனர்.

குறித்த பாடசாலையானது மிகவும் பின்தங்கிய பிரதேச பாடசாலை எனவும் இந்த மாணவர்களின் வெற்றிக்கு பாடசாலையின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் என்போர் பெரும் பங்காற்றியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

மேலும் குறித்த பாடசாலையின் வளர்ச்சியில் பாடசாலையின் அதிபர் பெரியசாமி அருள்ராஜனின் பங்களிப்பு அளப்பறியது எனவும் குறித்த மாணவர்களை ஊக்குவித்து அவர்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வழிவகுக்க வேண்டியது அனைவரது கடமை எனவும் பாடசாலைச் சமூகம் கருத்து வெளியிட்டுள்ளது.

மேலும் மத்தியமாகாண தமிழ் கல்வி அமைச்சர் ம.ராமேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மத்திய மாகாண கல்வி பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்