யாழ். பல்கலைக்கழக சித்தமருத்துவ மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில்

Report Print Sumi in கல்வி

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கைதடியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக சித்த மருத்துவ அலகு மாணவர்களும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று முதல் நிறுத்தியிருந்த நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிர்வாக முடக்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதேவேளை கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என உறுதியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை தொடரப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்