யாழில் சாதனை மாணவிகளுக்கு கௌரவிப்பு

Report Print Thamilin Tholan in கல்வி

யாழ். அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் 16 வயது மற்றும் 18 வயதுக்குக் கீழான வலைப்பந்தாட்ட அணியினர் 2017ஆம் ஆண்டுக்கான வடமாகாண சம்பியனாகத்தெரிவு செய்யப்பட்டமையை முன்னிட்டுப் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வு நேற்றைய தினம்(30) முற்பகல் 10 மணி முதல் வித்தியாலய அதிபர் தலைமையில் நடபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில், வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இதன்போது, தனது 2017ஆம் ஆண்டுக்கான வடமாகாண சபை நிதியொதுக்கீட்டிலிருந்து சாதனை மாணவிகளுக்கு காலணிகளை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை, இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினருடன் அதிபர், ஆசிரியர்கள், சாதனை மாணவிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

படங்கள் - சுமி

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்