ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Report Print Theesan in கல்வி

வவுனியா - கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

குறித்த போராட்டம் பாடசாலை ஆசிரியரின் இடமாற்றத்தை கண்டித்து இன்று காலை காலை 8.00 மணி தொடக்கம் 9.30 மணிவரையில் பாடசாலை வாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கணித பாட ஆசிரியரின் இடமாற்றத்தினை தடை செய், கல்வி எங்கள் எதிர்காலம் அதை சிதைக்காதே, கல்வி வலயமே பதில் கூறு போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது, போராட்ட இடத்திற்கு வருகை தந்த வவுனியா வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி (ஓமந்தை) சசிகுமார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

இந்தநிலையில் குறித்த ஆசிரியரின் இடமாற்றத்தினை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு தமது கற்றல் நடவடிக்கைகளை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்