கணினிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 45 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

Report Print Ashik in கல்வி

களிமோட்டை - புளியங்குளம் கிராமத்தில் இடம்பெற்று வந்த இலவச கணினிப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் பவமொழி பவன் தலைமையில் களிமோட்டை ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச கணினிப்பயிற்சி நெறியின் 17ஆவது பயிற்சி நெறி களிமோட்டை புளியங்குளம் கிராமத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

நண்பனின் தேவை நற்பணி மன்றத்தினால் கடந்த இரண்டு மாதங்கள் நடத்தப்பட்ட பயிற்சி நெறியில் சுமார் 45 மாணவ, மாணவிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்போது, பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் கலந்து கொண்டு மாணவர்களிற்கான சான்றிதழ்களை வழங்கி வைத்துள்ளார்.

மேலும், நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்