கிளி/ பளை மத்திய கல்லூரி மாணவர் நாடாளுமன்ற நிகழ்வு

Report Print Yathu in கல்வி

கிளி/ பளை மத்திய கல்லுாரியின் மாணவர் நாடாளுமன்றின் கன்னி அமர்வு நிகழ்வானது நேற்று (27.10.2017)காலை 10 மணியளவில் பாடசாலையின் பாடசாலை அதிபர் சி.பாலகிஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சட்டத்தரணி யோகராசா யோகானந்தி, சிறப்பு விருந்தினராக பளை கோட்டக்கல்வி அலுவலகர் ஐ.குகானந்தராசா, கௌரவ விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக சமூகவிஞ்ஞான ஆலோசகரான ஜெ.நிஷாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் அவர்களால் செங்கோல்கொண்டு கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமக்கு உரிய கடமைகளையும், பாடசாலையில் தாங்கள் இனிவரும் காலங்களில் எவ்வாறு அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வரப்போகின்றோம் என்பது பற்றியும் சபாநாகர் அவர்களுக்கு முன்வைத்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்