வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Report Print Thileepan Thileepan in கல்வி

வவுனியா மாவட்டத்தின் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ் நாட்டை மையமாகக் கொண்டு செயற்படும் தனியார் சமூக அமைப்பின் நிதி அனுசரணையில் குறித்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களான வவுனியா அம்மிவைத்தான், மருதோடை, நாவற்குளம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சிலரினால் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்