மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் புதிய வகுப்பறை கட்டடத்தொகுதி திறந்து வைப்பு

Report Print Ashik in கல்வி

மன்னார் - சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான புதிய வகுப்பறை கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட இந்த கட்டட தொகுதியை வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில், மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான், யூ.என்.ஹபிற்டாட் நிறுவனத்தின் சிரேஸ்ட ஆலோசகர் ஐ.ஏ.ஹமீட், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்