பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்கு உணவு

Report Print Steephen Steephen in கல்வி

பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நேரத்தில் போஷாக்கான ஒரு வேளை உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கல்வியமைச்சில் காணப்பட்ட தேவையற்ற செலவுகள், முறைகேடான நிதி பாவனை மற்றும் அவசியமற்ற செலவுகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளதால், தேவையான நிதியை பெற்றுக்கொள்ள கூடிய சூழல் உருவாகியுள்ளது.

மாணவர்களுக்கு ஒரு வேளை போஷாக்கு உணவை வழங்கும் யோசனையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்க எண்ணியுள்ளதாகவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்