யாழ். மாவட்டத்தில் உருவாகும் புதிய தொழில் பயிற்சி கல்லூரி

Report Print Shalini in கல்வி

யாழ் மாவட்டத்தில் மீசாலை வடக்கு, தென்மராட்சி' பிரதேசத்தில் புதிய தொழில் பயிற்சி கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ். மாவட்டத்தில் தொழில் பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்காக 8,000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள போதும், அதில் 1,500 பேருக்கு தொழில்நுட்ப கல்லூரியின் வசதிகள் காணப்படுகின்றன.

இந்த நிலைமையினை கவனத்திற் கொண்டு, யாழ் மாவட்டத்தில் மீசாலை வடக்கு, தென்மராட்சி பிரதேசத்தில் 560 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் அடுத்த இரு வருடங்களுக்குள் புதிய தொழில் பயிற்சி கல்லூரியொன்றை நிர்மாணிக்க அரசு அனுமதியளித்துள்ளது.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்