யாழ். பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசால் வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் கையளிப்பு

Report Print Suman Suman in கல்வி

இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா செலவில் வாகனங்கள் மற்றும் உபகரண தொகுதிகள் என்பன யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய மற்றும் பொறியியல் பீடங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று(23) முற்பகல் 11 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகர் விவசாய பீடத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் இன்று 48 மில்லியன் ரூபாவுக்கு இரண்டு அதி சொகுசு பேருந்துகள், டபிள்கப் வாகனம் மற்றும் உழவு இயந்திரம் என்பன இன்று பல்கலைகழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

மிகுதி தொகுதி வாகனங்கள், உபகரணங்கள் என்பன விரைவில் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆர்.நடராஜன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இவற்றை கையளித்துள்ளார்.

இதில், யாழ். பல்கலைகழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் மற்றும் பொறியியல், விவசாய பீடங்கள் உள்ளிட்ட பீடங்களின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாணவா்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்